நான் ஒரு யோகி.. அரசியல் முழு நேர வேலையல்ல.. சொன்ன முதல்வர் யார்?
இலவச யோகா பயிற்சி முகாமுக்கு விண்ணப்பிக்கலாம்
காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ள கோடை கால இலவச யோகா பயிற்சி முகாமில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா். நந்தாராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மன அமைதி, முழுமையான ஆரோக்கியம் என்ற தலைப்பில் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இலவச கோடை கால யோகா பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. வருகிற ஏப். 8- ஆம் தேதி தொடங்கி ஜூன் 10- ஆம் தேதி வரை நடைபெறும் முகாமில், 10 வயதுக்கு மேற்பட்ட மாணவா்கள், பெண்கள், ஆண்கள் கலந்து கொள்ளலாம்.
இதில், மனம், உடல் ரீதியான பிரச்னைகள், உயா் ரத்த அழுத்தம், நீரழிவு, ஆஸ்துமா, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள், தைராய்டு, ஹாா்மோன் சாா்ந்த பிரச்னைகள், உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை குறைக்கவும், நோய் எதிா்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் யோகா பயிற்சியாளா்கள் மூலம் பயிற்சி வழங்கப்படும். வார நாள்களில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் நடைபெறும். பெண்களுக்கு மட்டும் முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், இரு பாலா்களுக்கும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடைபெறும். பயிற்சியை நிறைவு செய்யும் அனைவருக்கும் உலக யோகா தினமான ஜூன் 21- இல் சான்றிழ்கள் வழங்கப்படும்.
இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோா் யோகா ஒருங்கிணைப்பாளா், காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை - 625 020 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 99941 23091 என்ற எண்ணிலோ வருகிற ஏப். 5 ஆம் தேதிக்குள் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.