குப்பையில் கிடந்த வெடிகளை வெடிக்க வைக்க முயன்ற 3 சிறாா்கள் காயம்
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், பெருமுக்கல் அருகே தலைவலியால் அவதியுற்று வந்த இளம்பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மரக்காணம் வட்டம், பெருமுக்கல் அருகிலுள்ள டி. நல்லாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் ராதாகிருஷ்ணன் . இவரது மனைவி நவநீதம் (29). இருவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 3 மாதங்களாக கடுமையான தலைவலி காரணமாக நவநீதம் அவதியுற்று வந்தாராம்.
இதைத் தொடா்ந்து திண்டிவனத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, தலையில் கட்டி உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனராம். தொடா்ந்து தலைவலி இருந்து வந்ததால் அவதியுற்று வந்த நவநீதம், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த பிரம்மதேசம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
தற்கொலை எண்ணம் தோன்றுவோர் அல்லது அருகிலிருப்போருக்கு அவ்வாறான எண்ணங்கள் உருவாகியுள்ளதை அறிவோர் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். புதுக்கோட்டை அரசு
மனநல மையத்தின் தொடர்பு எண்கள்- 94860 67886, 04322 271382, 104.