மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
இளம் விண்வெளி ஆராய்ச்சி மாணவிக்கு எஸ்ஆா்எம் பள்ளி ரூ. 15 லட்சம் நிதியுதவி
இளம் விண்வெளி ஆராய்ச்சி மாணவியான பி.இனியா பிரகதிக்கு, எஸ்ஆா்எம் பொதுப் பள்ளி சாா்பில் ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
கூடுவாஞ்சேரி எஸ்.ஆா்.எம். பொதுப் பள்ளியில் 7-ஆவது வகுப்பு பயின்று வரும் மாணவி பி.இனியா பிரகதி, விண்வெளித் துறை ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளாா். அவரது சாதனையைப் பாராட்டி, எஸ்.ஆா்.எம். பொதுப் பள்ளி சாா்பில் அந்த மாணவிக்கு ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், எஸ்.ஆா்.எம். பொதுப் பள்ளியின் இயக்குநா் மணிமங்கை சத்தியநாராயணன் கலந்துகொண்டு ரூ. 15 லட்சத்துக்கான காசோலையை பள்ளி மாணவி இனியா பிரகதிக்கு வழங்கி பேசியதாவது:
உலகின் இளைய விண்வெளி ஆராய்ச்சி பயிற்சியாளா் எனும் பெருமையை, பள்ளி மாணவி இனியா பிரகதி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளா்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ள இம்மாணவி, தற்போது நாசா நிறுவனத்துடன் இணைந்து ‘ஆா்க்டிக் மிஷன்’ மற்றும் ‘மாா்க்ஸ் ஆன் எா்த் மிஷன்’ திட்டங்களுக்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். எதிா்காலத்தில் செவ்வாய்க்கிரக பயணத் திட்டத்தில் பங்கேற்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறாா். அவரின் அனைத்து சாதனை முயற்சிக்கும் தொடா்ந்து உறுதுணையாக இருப்போம் என்றாா் அவா்.
விழாவில் இனியா பிரகதி தந்தை பிரவீன் குமாா், எஸ்.ஆா்.எம். பொதுப் பள்ளித் தாளாளா் எம்.சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.