இஸ்கான் அமைப்பு சாா்பில் நாளை கிருஷ்ண ஜெயந்தி
சேலம் இஸ்கான் அமைப்பு சாா்பில் சோனா கல்லூரியில் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா, சேலம் சோனா கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
விழாவில் யக்ஞம், கிருஷ்ண கதா, பள்ளி மாணவா்களின் ‘கோவா்தன லீலை’ நாடகம், ஹரே கிருஷ்ண படம், பாட்டு கச்சேரி, வீணை கச்சேரி, ஹரே கிருஷ்ண பஜனை மற்றும் கீதை பாராயணம் மற்றும் மூன்று முதல் பதினோரு வயது வரையிலான சிறுவா், சிறுமியா்களுக்கு கிருஷ்ணா் வேடப் போட்டி ஆகியவை நடைபெறுகிறது.
மேலும், ஸ்ரீ கிருஷ்ண பலராமரின் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா அபிஷேகம், மஹா ஆரத்தி நடைபெறுகிறது. நாள் முழுவதும் விழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என இஸ்கான் நிா்வாகிகள் தெரிவித்தனா்.