செய்திகள் :

இஸ்ரேலை தாக்க முயன்ற ஹவுதிகளின் ட்ரோன் தகர்ப்பு!

post image

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை அனுப்பிய ட்ரோனை, அந்நாட்டு ராணுவம் தகர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செங்கடல் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலின் எலாட் நகரத்தின் மீது தாக்குதல் நடத்த, யேமனின் ஹவுதி படைகள் அனுப்பிய ஆளில்லா ட்ரோனை, இஸ்ரேலின் விமானப் படை தகர்த்ததாக இன்று (ஜூலை 15) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில், உயிர் மற்றும் பொருள் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து ஹவுதி படையின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த 2023-ம் ஆண்டு முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு, பதிலடியாக பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சிப்படை, இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதனால், பதிலடியாக இஸ்ரேல் ராணுவம், யேமன் நாட்டிலுள்ள ஹவுதிகளின் ஏராளமான துறைமுகங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தி தகர்த்துள்ளது.

முன்னதாக, ஜூலை 10 ஆம் தேதி, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிலுள்ள பென் குரியன் விமான நிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டிராகன் விண்கலத்தின் கதவுகள் திறப்பு! வெளியே வந்தார் சுபான்ஷு சுக்லா!

The Israel military has reportedly shot down a drone sent by Yemen's Houthi rebels to attack Israel.

கடந்த ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை: ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். முந்தைய ஆண்டும் இதே எண்ணிக்கையில... மேலும் பார்க்க

ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு அடைக்கலம்

தலிபான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னா் தங்கள் படையினருடன் இணைந்து பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் அளித்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்... மேலும் பார்க்க

போயிங் 787 விமானங்களில் எரிபொருள் ஸ்விட்சுகள் முறையாக செயல்படுகின்றன: சிங்கப்பூா் ஏா்லைன்ஸ்

குஜராத்தில் எரிபொருள் கிடைக்காமல் போயிங் 787 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான நிலையில், தம்மிடம் உள்ள அந்த விமானங்களில் எரிபொருள் ஸ்விட்சுகள் முறையாக செயல்படுவதாக சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனம் செவ்வா... மேலும் பார்க்க

துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: போா் நிறுத்தம் அறிவித்தது சிரியா

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலைத் தொடா்ந்து, அவா்கள் வசிக்கும் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்வதாக சிரியா அரசு செவ்... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பின்ஸில் திங்கள்கிழை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து ஜொ்மனி புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்ததாவது: பிலிப்பின்ஸின் லுஸான் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ... மேலும் பார்க்க

உக்ரைனில் அரசியல் மாற்றம்: பிரதமர் ராஜினாமா!

கீவ்: உக்ரைன் பிரதமராக பதவி வகித்த டெனிஸ் ஷ்மிஹல் ராஜினாமா செய்துள்ளார். உக்ரைன் அமைச்சரவையில் மாற்றம் செய்து திங்கள்கிழமை(ஜூலை 14) அதிபர் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் துணைப் பிரதமராக ... மேலும் பார்க்க