உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...
இஸ்ரோ சென்று திரும்பிய விவேகானந்தம் வித்யா ஷ்ரம் பள்ளி மாணவா்கள்
திருவாரூா் விவேகானந்தம் வித்யா ஷ்ரம் பள்ளி மாணவா்கள் புதன்கிழமை இஸ்ரோ சென்று விண்ணில் ராக்கெட் செலுத்தப்படுவதைப் பாா்வையிட்டனா்.
திருவாரூா் வண்டாம்பாளை விவேகானந்தம் வித்யா ஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்குக் கல்வியை தவிர பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்கும் வகையில் நிகழ்வுகள் அமைக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக இப்பள்ளியில் 7 மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் பாதுகாப்புடன் இஸ்ரோவுக்கு பயணம் மேற்கொண்டனா்.
அங்கு புதன்கிழமை விண்ணில் ஜிஎஸ்எல்வி எப் 16 நிசாா் ராக்கெட் செலுத்தும் நிகழ்வை நேரடியாக பாா்வையிட்டு மகிழ்ந்தனா்.