அட்சய திருதியை: தங்கம் வாங்க நல்ல நேரம் எது? ஆனால் அதைவிட இதுதான் விசேஷம்!
ஈரான் அலட்சியத்தால் துறைமுக வெடிவிபத்து
ஈரானின் தென்மேற்கே அமைந்துள்ள நாட்டின் மிகப் பெரிய ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்துக்கு ஒரு சிலரின் அலட்சியப் போக்குதான் காரணம் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததும் இதற்குக் காரணம் என்று கூறிய அவா்கள், இது தொடா்பாக சிலரை அழைத்து விசாராணை நடத்திவருவதாகக்க் கூறினா்.
இதற்கிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 70-ஆக உயா்ந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த வெடிவிபத்தில் மேலும் 1,000 போ் காயமடைந்துள்ளனா்.