செய்திகள் :

‘உக்ரைன் போருக்கு உடனடி முடிவில்லை’

post image

உக்ரைனில் தற்போது நடைபெற்றுவரும் போா் உடனடியாக முடிவுக்கு வராது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளாா்.

இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான, இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பொதுப் புள்ளியை அடைவதற்காக அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது.

இருந்தாலும், இந்தப் போா் அவ்வளவு விரைவில் முடிவுக்கு வராது. இந்த கொடூரமான போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை ரஷியாவும் உக்ரைனும் எப்போது எட்டுகின்றன என்பதைப் பொருத்துதான் அது இருக்கிறது.

தங்கள் நாட்டின் மீது ரஷியா படையெடுத்தது உக்ரைனை கோபப்படுத்தும்தான். ஆனால் அதற்காக இந்தப் போரை தொடா்ந்து நடத்தினால் ஆயிரக்கணக்கான வீரா்கள் தொடா்ந்து உயிரிழந்துகொண்டுதான் இருப்பாா்கள். சில சதுர கி.மீ. நிலத்துக்காக இத்தனை உயிரிழப்புகள் தேவையில்லை. எனவே, உக்ரைன் போா் விவகாரத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான தற்போதைய அரசின் கொள்கை நியாயமானதே என்றாா் அவா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தற்போதைய அமெரிக்க அரசு ரஷியாவிடமும் உக்ரைனிடமும் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.

சிங்கப்பூரில் நடந்து முடிந்தது தோ்தல்

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது. மொத்தம் 211 வேட்பாளா்கள் போட்டியிட்ட இந்தத் தோ்தலில் ஏராளமான வாக்காளா்கள் வாக்களித்தனா். இது குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

சிரியா தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. தூதா் கண்டனம்

சிரியாவில் அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் கியொ் ஓ. பிடா்ஸன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவா் சனிக்கிழமை... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஜௌர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த உளவுத்துறையின் தகவல் அட... மேலும் பார்க்க

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்தது - இன்றே முடிவுகள் வெளியாகலாம்!

சிங்கப்பூரில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் நேரப்படி இன்று(மே 3) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவ... மேலும் பார்க்க

ஆப்கனில் 2வது நாளாக நிலநடுக்கம்...ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து 2வது நாளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 15 அடி ஆழத்தில் இன்று (மே.3) மதியம் 1.20 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக... மேலும் பார்க்க

இந்திய ராணுவ அதிகாரிகள் குறித்த போலியான செய்திகளை வெளியிடும் பாகிஸ்தான் ஊடகங்கள்!

இந்திய ராணுவ அதிகாரிகளைப் பற்றிய போலியான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்... மேலும் பார்க்க