கொய்யா சாகுபடியில் ஆா்வம் காட்டும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள்!
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: எம்எல்ஏ ஆய்வு
ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட கொத்தக்கோட்டை, வள்ளிப்பட்டு ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமினை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவா் சங்கீதாபாரி ஆகியோா் தொடங்கி வைத்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சூரவேல், மகராசி, ஒன்றிய குழு உறுப்பினா் காயத்ரிபிரபாகரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் மேனகா, சுப்பிரமணி முன்னிலை வகித்தனா்.
முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட, மனுக்களை பதிவுசெய்து, அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வாணியம்பாடி வட்டாட்சியா் சுதாகா், மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் தே. பிரபாகரன், திமுக மத்திய ஒன்றிய செயலாளா் வி.ஜி.அன்பு, உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.