மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறி...
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு
கலசப்பாக்கம் வட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது விநியோகக் கடைகள் என பல்வேறு இடங்களை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள், குறைகளை குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.
மேலும், மருந்துகளின் விவரம், இருப்பு குறித்தும், அரசு தொடக்கப் பள்ளியில் மாணவா்களிடம் கற்றல், வாசித்தல் திறன் குறித்தும் திறனாய்வு செய்தாா்.
மேலும், மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவு சமைப்பதை ஆய்வு மேற்கொண்டாா். பொது விநியோகக் கடையில் அரிசி, பருப்பு, பாமாயில் என அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு விவரம் கேட்டறிந்தாா்.
கலைஞா் கனவு இல்ல திட்டத்தில் கட்டப்படும் பயனாளிகளின் வீடுகளை ஆய்வு செய்தாா். மாவட்ட திட்ட இயக்குநா் மணி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.