செய்திகள் :

`உங்கள் பிரச்னையை மட்டும் பார்க்கக் கூடாது..!' - கேள்வி கேட்ட விவசாயி; கடுப்பான எடப்பாடி பழனிசாமி!

post image

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று அவர் கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

“திராவிட மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் ஆகிவிட்டது.” என்று விமர்சனம் செய்திருந்தார். இன்று அவர் பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

முன்னதாக பொள்ளாச்சி தனியார் ஹோட்டலில் விவசாயிகள், தொழில் அமைப்பினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கள் இறக்குவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு விவசாயி,

எடப்பாடி பழனிசாமி

“நீங்கள் ஆட்சியில் இருந்தபோது ஏன் கள் இறக்க அனுமதி கொடுக்கவில்லை” என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினார். அங்கிருந்து அதிமுக நிர்வாகிகள், பௌன்சர்கள், பொள்ளாச்சி ஜெயராமன், வேலுமணி ஆகியோர் விவசாயியை  சமாதானம் செய்ய முயற்சித்தனர்.

விவசாயி தொடர்ந்து கேள்வி கேட்டதால் எடப்பாடி பழனிசாமி டென்ஷன் ஆனார்.ஒரு கட்டத்தில் அவர், “உங்கள் ஒருவரின் பிரச்னையை மட்டும் பார்க்கக் கூடாது. இங்கு பொதுவாக தான் பேச வேண்டும். கோரிக்கை மட்டும் வையுங்கள். கருத்து சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் கூட்டம்

உங்களுக்கு கஷ்டம் இல்லை என்று சொல்லவில்லை. அதேநேரத்தில் மற்றவர்களின் மனம் புண்படக் கூடாது.” என்றார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரப்பான சூழல் நிலவியது.  

மும்பை மாநகராட்சித் தேர்தல்: ராஜ் தாக்கரே இல்லத்திற்கு சென்று கூட்டணி குறித்து பேசிய உத்தவ் தாக்கரே

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாத இறுதியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே வந்தது. மகாராஷ்டிரா அரசிய... மேலும் பார்க்க

நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!

அண்டை நாடான நேபாளத்தில், இளைஞர்கள் போராட்டம் கலவரமாக வெடித்ததில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம், நீதிமன்றம், பிரதமர் இல்லம், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் பல்வேறு பொது, தனியார் சொத்துகள் கலக... மேலும் பார்க்க