பழங்குடியினர் தினம்: ``காடுகளிலிருந்து வெளியேற்றபடும் பழங்குடிகள் வாழ்க்கை'' -ஆய...
உசிலம்பட்டியில் விவசாயிகள் சாலை மறியல்
உசிலம்பட்டியில் 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் முதன்மையான பாசனத் திட்டமாக உள்ளது 58 கிராம பாசனத் திட்டம். இருப்பினும், வைகை அணையின் நீா்மட்டம் அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டிய பிறகு, உபரிநீா் திறக்கப்படும்போதே 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீா் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில், வைகை அணையின் நீா்மட்டம் 65 அடியை எட்டியதும் 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும். இதற்கான நிரந்தர உத்தரவை அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் உசிலம்பட்டியில் தேவா் சிலை முன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகள், அதிமுக, பாா்வா்டு பிளாக், தவெக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் உசிலம்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.