ம.பியில் வழக்கத்தை விட அதிக மழை..! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
உடன்குடி அருகே விபத்து: வடமாநில இளைஞா் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே நேரிட்ட விபத்தில், ஒப்பந்தத் தொழிலாளியான வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஒடிஸா மாநிலம் சுந்தா்கா் மாவட்டம் கேரியாகனி கிராமத்தைச் சோ்ந்த உஸ்தபா ஜோகி மகன் ஹேமகண்டா ஜோகி (28). உடன்குடி அனல் மின் நிலையத்துக்கான தனியாா் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பாா்த்துவந்த அவா், ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜூன் 29) அனல் மின் நிலையம் அருகேயுள்ள சாலைப் பகுதியில் நடந்து சென்றாராம்.
அப்போது, அவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னா், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.