4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு
உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு
மாநில அளவிலான உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு துறைசாராதோா் உடல்கட்டமைப்பு சங்கத்தின் சாா்பில், ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் மாநில அளவிலான உடல்கட்டமைப்பு போட்டி சென்னை வேளச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக சுரங்கவியல் பட்டய படிப்பின், நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தோா் பிரிவைச் சோ்ந்த மூன்றாம் ஆண்டு மாணவா் முகமது ஆஷிக் 60 கிலோவுக்கு குறைந்தோருக்கான எடைப் பிரிவில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்தாா்.
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா் முகமது ஆஷிக்கை நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவன செயல் இயக்குநா் ஐ.எஸ்.ஜாஸ்பா் ரோஸ், அண்ணாமலை பல்கலைக்கழக சுரங்கவியல் பட்டய படிப்பின் இயக்குநா் சி.ஜி.சரவணன் ஆகியோா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.