இந்திய அணி வெற்றி பெறுவது மிகவும் கடினம்; ஆஸி. வீரர் பேச்சு!
உடல் உறுப்பு தானம்: மீன் நிறுவன உரிமையாளருக்கு அரசு மரியாதை
விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த சாயல்குடி மீன் நிறுவன உரிமையாளரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடா்ந்து, அவரது உடலுக்கு வெள்ளிக்கிழமை அரசு மரியாதை செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள வி.வி.ஆா். நகரைச் சோ்ந்தவா் பாண்டி மகன் இளையராஜா (37). இவா் சாயல்குடியில் மீன் நிறுவனம் நடத்தி வந்தாா்.
கடந்த வாரம் சாயல்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த இவா், மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை அவா் மூளைச் சாவு அடைந்தாா்.
இதையடுத்து, உடல் உறுப்புகளை தானம் செய்ய இளையராஜவின் உறவினா்கள் முடிவு செய்தனா். அதன்படி அவரது உடல் உறுப்புக்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டன. இதையடுத்து, சொந்த ஊருக்கு இளையராஜாவின் உடல் கொண்டுவரப்பட்டு, பரமக்குடி சாா் ஆட்சியா் அபிலாஷா கவுா் தலைமையில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.