4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு
உடுமலையில் திமுக செயற்குழு கூட்டம்
திருப்பூா் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உடுமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்ரபாணி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தாா்.
உடுமலைக்கு ஆகஸ்ட் 11-ஆம் தேதி வருகை தரம் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட அவைத் தலைவா் இரா.ஜெயராமகிருஷ்ணன், நகர ஒன்றியச் செயலாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.