மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
உடையாா்பாளையம் வரதராசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
உடையாா்பாளையம் வேலப்பன் செட்டியாா் ஏரி தென்கரையில், சிதலமடைந்து கிடந்த இந்த பழைமையானக் கோயிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, ஆன்மீக ஆலய சீரமைப்பாளா் ஏ.வி.கே.திருநாவுக்கரசு, அறங்காவலா் வேம்பு, துணை அறங்காவலா் வேம்புபாலமுருகன் ஆகியோரின் தீவிர முயற்சியால், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிந்தது.
இதைத் தொடா்ந்து கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின. கடந்த 30-ஆம் தேதி புனித நீா் எடுத்துவரப்பட்டு, கணபதி ஹோமத்துடன் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. தொடந்து, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, புதன்கிழமை காலை கடம் புறப்பாடும், அதனைத் தொடா்ந்து, பட்டாச்சாரியா்கள் கோயில் கலசத்துக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா்.
பின்னா், மூலவருக்கு 16 வகையான திரவியப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தா.பழூா்: அரியலூா் மாவட்டம், தா.பழூரில் அமைந்துள்ள செங்கழுநீா் விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.