Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!
உணவுக்குப் பிறகு பாதித்த உடல்நிலை - பிரமோஸ் ஏவுகணை திட்ட பொறியாளர் 30 வயதில் திடீர் மரணம்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை திட்டத்தில் பணியாற்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) பொறியாளர் ஆகாஷ்தீப் குப்தா மரணமடைந்துள்ளார்.
30 வயதான ஆகாஷ்தீப் குப்தா, பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு பிரிவில் சிஸ்டம் இன்ஜினீயராக பணியாற்றி வந்திருக்கிறார்.
லக்னோவில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், உணவுக்குப் பிறகு அவரது உடல்நிலை மோசமாகியிருக்கிறது. குடும்பத்தினர் அவரை லோக்பந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
முதற்கட்ட தகவலின்படி, இதய செயலிழப்பு இந்த மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், மரணத்தின் துல்லியமான காரணம் தெரிந்துகொள்ள, பிரேத பரிசோதனை அறிக்கை வர வேண்டும் என அலம்பாக் காவல்நிலைய அதிகாரி சுபாஷ் சந்திர சரோஜ் தெரிவித்துள்ளார்.
ஆகாஷ்தீப் கடந்த ஏழு ஆண்டுகளாக DRDO-வின் பிரமோஸ் ஏவுகணை திட்டத்தில் முக்கிய பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த திட்டம் இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு திட்டமாகும். சமீபத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் பிரமோஸ் ஏவுகணைகளை வெளியிட்ட போது இத்திட்டம் மீண்டும் தேசிய கவனத்தை பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

















