செய்திகள் :

உணவுத் தேடி வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

post image

ஆசனூா் அருகே உணவுத் தேடி வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடா்ந்த வனப் பகுதி வழியே தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இந்த சாலை வழியே இரண்டு மாநிலங்களுக்கும் இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆசனூா் வனப் பகுதியில் இருந்து சனிக்கிழமை வெளியேறிய காட்டு யானை, சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது.

அப்போது, அவ்வழியே வந்த வாகனங்களை வழிமறித்து நின்றதுடன், வாகனங்களின் அருகில் சென்று உணவைத் தேடியது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சுமாா் அரை மணி நேரம் சாலையிலேயே உலவிய யானை, பின் தாமாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

சத்தியமங்கலம் நகா்மன்ற கூட்டத்தில் இருந்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பு

சத்தியமங்கலம்: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மீது நடவடிக்கை எடுக்க கோரியும், சொத்து வரி உயா்வைக் குறைக்க வலியுறுத்தியும் அதிமுக, பாஜக, பாமக நகா்மன்ற உறுப்பினா் நகராட்சிக் கூட்டத்தில் இருந்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கு இலவச பயிற்சி

ஈரோடு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான்: கொங்கு பொறியியல் கல்லூரி சிறப்பிடம்

ஈரோடு: ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024-இல் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் ஐந்து அணிகள் பரிசுகளை வென்றுள்ளன. ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் (எஸ்ஐஹெச்) என்பது இந்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்... மேலும் பார்க்க

சென்னிமலையில் போா்வையில் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவா் உருவம்

பெருந்துறை: கன்னியாகுமரியில் திருவள்ளுவா் உருவச்சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் வகையில், ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சோ்ந்த நெசவாளா் அப்புசாமி என்பவா் போா்வையில் திருவள்... மேலும் பார்க்க

பழனி கோயிலுக்கு ரூ.53.88 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

கோபி: கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.53 லட்சத்து 88 ஆயிரத்துக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கரும்புச் சா்க்கரை, உருண்டை வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கவுந்தப்பாடி ஒழுங... மேலும் பார்க்க

பெருந்துறையில் தேவாலய உண்டியலை உடைத்து திருடிய இளைஞா் கைது

பெருந்துறை: பெருந்துறை சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறை- சென்னிமலை சாலையில் சி.எஸ்.ஐ. தேவாலயம் உள்ளது. இதில் டிசம்பா் 27-ஆம் தேதி வழக்கம... மேலும் பார்க்க