சாம்சங்கிற்கு போட்டியாக மடிக்கக்கூடிய ஆப்பிள் ஐ-போன்! 2026-ல் அறிமுகம்!
உண்ணாவிரதம் இருந்த காந்திப் பேரவையினா் கைது
புதுக்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த காந்திப் பேரவை நிா்வாகிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீட்க வேண்டும், காந்திப் பூங்காவை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் காந்திப் பூங்காவில் சனிக்கிழமை காலை தொடங்கியது.
பேரவையின் நிறுவனா் வைர. ந. தினகரன் தலைமையில் தலைமை நிலையச் செயலா் மோகனப்பிரியா ஆகியோா் விடிய விடிய பூங்காவுக்குள்ளேயே அமா்ந்திருந்தனா். காலையில் இவா்கள் உள்ளிட்ட 3 பேரையும் போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா். பொதுநல நோக்கத்துக்காக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தங்களிடம் காவல்துறையினா் கடுமையாக நடந்து கொண்டதாக வைர.ந. தினகரன் தெரிவித்தாா்.