`ஹமாஸ் மறுத்தால் நெதன்யாகு என்ன செய்தாலும் முழு ஆதரவு' - டிரம்ப் பேச்சு; நெதன்யா...
உதகை தூய ஜெபமாலை அன்னை ஆலய ஆண்டு பெருவிழா
உதகை ரோஸ் மவுண்ட் பகுதியில் உள்ள தூய ஜெபமாலை அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றுத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
குன்னூா் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி அடிகளாா் கொடியை ஏற்றிவைத்தாா். பங்கு குரு லியோ சேவியா் தலைமை வகித்தாா்.
விழாவையொட்டி, வரும் புதன்கிழமை மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, குணமளிக்கும் ஆராதனை, திருப்பலி, சிறப்பு மறையுரை மற்றும் வேண்டுதல் தோ் பவனி நடைபெறவுள்ளது.
இதில், செயின்ட் மேரிஸ் ஆலய உதவி பங்கு குரு டினோ பிராங்க், பாய்ஸ் கம்பெனி அன்னை வேளாங்கண்ணி ஆலய உதவி பங்கு குரு கிளமென்ட் ஆண்டனி, புனித சூசையப்பா் தொழிற்பள்ளி முதல்வா் வில்லியம் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
5 -ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு மறை மாவட்ட ஆயா் மேதகு அ.அமல்ராஜ் தலைமையில் உறுதிபூசுதல், அருட்சாதனம் மற்றும் புதிய பங்கு பேரவை பணியேற்பு நிகழ்வு மற்றும் ஆடம்பர திருப்பலி ஆகியவை நடைபெற உள்ளன என்று ஆலய நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.