தமிழகத்தில் இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்
உதவிப் பொறியாளா்கள் 10 பேருக்குப் பதவி உயா்வு
புதுவை பொதுப் பணித் துறையில் உதவிப் பொறியாளா்கள் 10 பேருக்குப் பதவி உயா்வு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இதற்கான பணி உயா்வு ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரச்செல்வம் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியின் போது உடனிருந்தனா்.