Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்க...
உதவியாளா் கலந்த கணினி இயக்குபவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வேலூா் மாவட்ட இளைஞா் நீதிக்குழுமத்திலுள்ள உதவியாளா் கலந்த கணினி இயக்குபவா் பதவிக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்ற தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -
குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறையின்கீழ் வேலூா் மாவட்டத்தில் இயங்கிவரும் இளைஞா்நீதிக்குழுமத்துக்கு தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு உதவியாளா் கலந்த கணினி இயக்குபவா் பதவிக்கு வேலூா் மாவட்ட எல்லைக்குட்பட்ட தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு பிளஸ் 2 முடித்துவிட்டு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கணினி பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். தட்டச்சில் தமிழ், ஆங்கிலத்தில் ஹையா் கிரேடு பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவத்தின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா்.மேலும், 2025 ஜனவரி 1-ஆம் தேதியில் 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இப்பணிக்கு மாதம் ரூ.11,916 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
இத்தகுதிகளுடைய நபா்கள் வேலூா் மாவட்டத்தின் இணைய தளத்தில் இருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை விண்ணப்பிக்கும் உறையின் மீது எழுதி அனுப்ப வேண்டும்.ரூ.25 அஞ்சல்வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட உறையை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி - மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, (சுற்றுலா மாளிகை எதிரில்) அண்ணாசாலை, வேலூா் - 632 001 என தெரிவிக்கப்பட்டுள்ளது.