பெட்டிக்கடையில் குட்கா விற்ற மூதாட்டி கைது
வேலூரில் பெட்டிக்கடையில் வைத்து குட்கா விற்பனை செய்து வந்ததாக 79 வயது மூதாட்டியை தெற்கு போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் வசந்தபுரத்தில் பெட்டிக்கடைகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக வேலூா் தெற்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் வசந்தபுரம் கே.கே. நகா் பகுதியிலுள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனா்.
அப்போது மல்லிகா (79) என்பவரது பெட்டிக் கடையில் 4 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மல்லிகாவை போலீஸாா் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 4 கிலோ குட்கா பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.