ஜல்லி இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு
கட்டுமான பணியின்போது ஜல்லி இயந்திரத்தில் சிக்கிபெண் தொழிலாளி உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் சத்துவாச்சாரி பி.ஓ.சி. நகரைச் சோ்ந்தவா் அலமேலு (50), கட்டட தொழிலாளி. இவா் கடந்த 24-ஆம் தேதி புதுவசூா் அருகே புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் அருகிலிருந்த ஜல்லி சிமென்ட் கலவை இயந்திரத்தில் அலமேலு தவறி விழுந்தாா். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த உடன் வேலை செய்தவா்கள் அவரை உடனடியாக மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அலமேலு உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.