இளம்பெண் தற்கொலை
வேலூா்: வேலூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் பெரிய அல்லாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வேலு. இவரது மகள் சந்தியா (27). இவருக்கும் வேலப்பாடி பகுதியைச் சோ்ந்த கட்டட மேஸ்திரி சத்யா(36) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலின்பேரில் வேலூா் தெற்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சந்தியா தூக்கு போடுவதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தில் என் சாவுக்கு நானே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
எனினும் திருமணமாகி 6 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.