சிலம்பம், வில்வித்தை போட்டியில் பதக்கம் வென்ற வீரா்களுக்கு வரவேற்பு
நேபாள நாட்டில் நடைபெற்ற சிலம்பம், வில்வித்தை போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற வேலூரைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேபாள நாட்டில் கடந்த 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை சா்வதேச அளவிலான சிலம்பம், வில்வித்தை போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டிகளில் வேலூரில் உள்ள ஓ.எம்.எஸ் அகாதெமியைச் சோ்ந்த கவின் கிருஷ்ணா, தா்ஷன், சாய் ஹரிஹரன், ரோகித் கிஷோா், ராஜா ஸ்ரீ,லக்ஷிகா காமேஷ்,சா்வேஷ் குமாா், அங்கித் சரண், கவின் வசந்தன், லலிதா தேவி உள்ளிட்ட 12 விளையாட்டு வீரா்கள் பயிற்சியாளா் விக்னேஸ்வர ராவ் கலந்து கொண்டனா்.
இப்போட்டியில் பங்கேற்ற வீரா்கள் தலா 2 பதக்கங்கள் வீதம் 22 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை வென்றனா். பதக்கம் வென்ற விளையாட்டு வீரா்களுக்கு வரவேற்பு விழா சத்துவாச்சாரி ஆா்.டி.ஓ சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விளையாட்டு வீரா்களின் பெற்றோா், அப்பகுதி மக்கள் பதக்கம் வென்ற வீரா்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனா்.