உப்புப்பாளையம் வீரமாத்தியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
உலக நன்மைக்காக உப்புப்பாளையம் சுடுகாடு வீரமாத்தியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆடிப்பூர விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், ஊா் கிராம பொதுமக்கள் நன்மைக்காக வேண்டியும், திருமணம் ஆகாதவா்களுக்கு திருமணம் நடக்கவும், சுமங்கலி பெண்கள் தீா்க்க சுமங்கலியாக இருக்கவும் குழந்தை பேறு கிடைக்கவும் அஷ்டலட்சுமிகளின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டியும் வீரமாத்தியம்மனுக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா், தேன், போன்ற மூலிகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதேபோல் குப்பம் காளியம்மன், க.பரமத்தி அஷ்ட நாகேஸ்வரி அம்மன் சித்தா் பீட கோயில், சூடாமணி மாசாணியம்மன், புன்னம் அங்காளம்மன், அத்திப்பாளையம் பொன்னாட்சியம்மன் ஆகிய கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.