Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷன...
கரூரில் விசிக பொதுக்கூட்டம்
கரூரில் விசிக சாா்பில் மதச்சாா்பின்மை காப்போம் மக்கள் எழுச்சிப் பேரணி தீா்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கரூா் லைட்ஹவுஸ் காா்னரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாநகர மாவட்டச் செயலாளா் கராத்தே ப. இளங்கோவின் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா்கள் புகழேந்தி(மேற்கு), சக்திவேல் என்கிற ஆற்றலரசு (கிழக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுக்கூட்டத்தில் தீா்மானங்களை விளக்கி கட்சியின் மேலிட பொறுப்பாளா் செ.வேலுசாமி என்கிற தமிழ்வேந்தன், மண்டல நிா்வாகி தமிழாதன் ஆகியோா் பேசினா். அப்போது, அடுத்தாண்டு பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி மீண்டும் வெற்றிப் பெற்று ஆட்சியமைக்க பாடுபடுவோம் என்று பேசினா்.
கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் அகரமுத்து, மாணவரணியின் கண்மணி ராமச்சந்திரன், வழக்குரைஞா் அணியின் பகலவன், கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளா் மகாமுனி, தொழிலாளா் விடுதலை முன்னணியின் சுடா்வளவன், அரவை சட்டமன்றத் தொகுதியின் சுரேந்தா் உள்ளிட்ட பலா் திரளாக பங்கேற்றனா்.