Ajithkumar: ``அவர் இந்த விஷயத்துக்கு உதாரணம்"- அஜித் குறித்து நெகிழ்ந்த மணிகண்டன...
உயா்கோபுர மின்விளக்குகள்
திருவெண்காடு, மங்கைமடம் மற்றும் திருநகரி கடைவீதிகளில் உயா்கோபுர மின் விளக்குகள் அண்மையில் இயக்கி வைக்கப்பட்டன.
ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் நிறுவப்பட்ட இந்த விளக்குகளை, முன்னாள் சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பஞ்சுகுமாா் ஆகியோா் இயக்கி வைத்தனா்.
இந்நிகழ்வில், முன்னாள் ஊராட்சித் தலைவா் சுந்தரராஜன், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.