உயிரிழந்த முதியவரின் கண்கள் தானம்
பெருமாநல்லூரில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முதியவரின் கண்கள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டன.
பெருமாநல்லூா், அறிவொளி நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (82). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த இவா், வயது மூப்பு காரணமாக பெருந்துறை சேனடோரியம் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தான் இறந்த பிறகு கண்களை தானம் செய்ய வேண்டும் என தனது மகனும், பெருமாநல்லூா் ஊராட்சி முன்னாள் தலைவருமான மகேந்திரனிடம் ஏற்கெனவே கூறியுள்ளாா்.
அதன்படி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி நிா்வாகத்தின் மூலம், அகா்வால் மருத்துவமனை சாா்பில் கண்கள் தானமாக பெறப்பட்டு சென்னை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.