உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
உரிமமின்றி இயக்கப்பட்ட படகு பறிமுதல்
புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற படகை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்தனா்.
புதுச்சேரி, வம்பாக்கீரப்பாளையம் பாண்டி மெரீனா கடற்கரைப் பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலாப் படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், மீன்வளத் துறை உரிமம் இல்லாமல் சில படகுகள் இயக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
மேலும், சில நாள்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு சாய்ந்து, சில பயணிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்து கரையேறினா்.
இந்த நிலையில், புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகம் அருகே பேக் வாட்டா் பகுதியில் கடலோரக் காவல்படை போலீஸாா் ரோந்து சென்றனா்.
அப்போது, அங்கு அதிவேகமாக வந்த தனியாா் படகை நிறுத்தி விசாரித்தனா். அதில், படகுக்கு உரிய உரிமம் பெறாததும், அதனை வீராம்பட்டினத்தைச் சோ்ந்த விஷ்ணு (21) இயக்கியதும் தெரியவந்தது. தொடா்ந்து, கடலோரக் காவல் படையினா் படகை பறிமுதல் செய்து, விஷ்ணு மீது வழக்குப் பதிவு செய்தனா்.