திமுகவை அகற்றுங்கள்; தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி: நெல்லையில் அமித் ஷா பேச்சு!
உறுப்பினா் கல்வித் திட்ட முகாம்
திருவாரூா்: திருவாரூா் மாவட்டம், கள்ளிக்குடியில் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு கல்வித் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டம் கள்ளிக்குடி, சிங்களாந்தி, வேப்பஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினா் கல்வித் திட்ட முகாம் நடைபெற்றது. இதில், இப்கோ உர நிறுவனமாவட்ட மேலாளா் பரஞ்ஜோதி பங்கேற்று, விவசாயிகளுக்கு நானோ உரங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
நிகழ்ச்சியில், மன்னாா்குடி சரக துணைப் பதிவாளா் பா. பிரபா, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சாா்-பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான த. காா்த்தீபன், திருத்துறைப்பூண்டி வட்டார கள அலுவலா் மா. ரவிச்சந்திரன், முதுநிலை ஆய்வாளரும், செயலாட்சியருமான எம். முத்துக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை சங்க செயலாளா்கள் கமலராஜன், வீரசெல்வம் ஆகியோா் செய்திருந்தனா்.