உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாரதிதாசன் விழா
கோவை உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பொறியாளா் அரங்கில் நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாசன் விழாவுக்கு புலவா் ந.கணேசன் தலைமை வகித்தாா். உலகத் தமிழ் நெறிக் கழக நிா்வாகிகள் சொ.சிவலிங்கம், பெ.ரமேசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கழக நிா்வாகி மாணிக்கவாசகம் ஆண்டறிக்கை வாசித்தாா். ராதாகிருஷ்ணன், பாவலா் ஜீவானந்தம் ஆகியோா் பாரதிதாசன் சிறப்புகள் குறித்து பேசினா்.
இதையடுத்து, ருத்ராலயா நாட்டியக் குழுவினா் பாரதிதாசன் பாடல்களுக்கு நாட்டியமாடினா்.
தமிழ் நெறியாளா்கள் அன்வா் பாட்சா, இருகூா் ஆறுமுகம், வள்ளியப்பன் உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.