உலகப் புகழ்பெற்ற மைசூர் பாக் - `மைசூர் ஸ்ரீ’ எனப் பெயர் மாற்றம்! ஏன்?
இனிப்புகளில் அதிகளவிலான விரும்பிகளைக் கொண்ட மைசூர் பாகின் பெயரை, ராஜஸ்தானின் இனிப்புக்கடைகள் பெயர் மாற்றம் செய்துள்ளது.
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அந்நாட்டின் மீது இந்தியர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் இனிப்பகத்தில் மைசூர் பாக், கோந்த் பாக், மோத்தி பாக், ஆம் பாக் முதலான இனிப்புகளின் பெயர்களை மைசூர் ஸ்ரீ, கோந்த் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ என்று கடை நிர்வாகம் மாற்றிவிட்டது.
இதன் காரணம் என்னவென்று கேட்டால், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவும் தெரிவிக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களுக்காவும்தான் பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்ட கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பெயர்களில் பாக். என்று இருப்பதால், அதனை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை என்றும் தெரிவித்தனர்.
இதனால்தான், பெயர்களில் இருந்த `பாக்’ என்றிருந்தை மாற்றி விட்டதாகக் கூறினர்.