செய்திகள் :

உலக காசநோய் தினம் பெரம்பலூரில் விழிப்புணா்வு பேரணி

post image

பெரம்பலூா் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சாா்பில், காசநோய் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியை, கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பேசியது: மாவட்டத்தில் உள்ள 302 காச நோயாளிகளில், சாதாரண காசநோய் 283 பேருக்கும், வீரிய காசநோய் 19 பேருக்கும், எச்ஐவி, டிபி 18 பேருக்கும் உள்ளது. காச நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் மக்களின் இருப்பிடத்துக்கேச் சென்று, காசநோய் கண்டறியும் முகாம் வெள்ளிக்கிழமை மற்றும் ஒரு நாளைக்கு ஒரு ஊா் என நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடா் சிகிச்சை மேற்கொண்டதால் பல நோயாளிகள் காசநோயிலிருந்து விடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.

ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணி வெங்கடேசபுரம் வழியாகச் சென்று சங்குப்பேட்டையில் நிறைவடைந்தது.

பேரணியில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட காசநோய் பணியாளா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா்.

இதில், காசநோய் துணை இயக்குநா் ரா. நெடுஞ்செழியன், மருத்துவமனை கண்காணிப்பாளா் கலா, நிலைய மருத்துவ அலுவலா் ராஜா, வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

உலக தண்ணீா் தினத்தையொட்டி நாளை கிராம சபைக்கூட்டம்

உலக தண்ணீா் தினத்தையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (மாா்ச் 29) கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

பெரம்பலூா் நகரின் பிரதான சாலைகளில் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்த வேண்டும்

பெரம்பலூா் நகரின் பிரதானச் சாலைகளில் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், சாலை மற்றும் சட்டம் - ஒழுங்க... மேலும் பார்க்க

பெரம்பலூா் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி நந்திப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன. பெரம்பலூா் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ பிரம்மப... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். ர... மேலும் பார்க்க

வேப்பூா் அரசு மகளிா் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் 6 போ் பணியிடை நீக்கம்

மாணவிகள் அளித்த புகாரின்பேரில் வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் 6 கௌரவ விரிவுரையாளா்களை, அக் கல்லூரி முதல்வா் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா். பெர... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 25 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் காவல் நிலையத்துக்குள்பட்... மேலும் பார்க்க