பெரியாா் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்க எதிா்ப்ப...
உலக செஸ் தரவரிசை: 3-ம் இடத்துக்கு முன்னேறிய குகேஷ்!
உலக செஸ் தரவரிசையில் தமிழக வீரர் குகேஷ் முதல்முறையாக மூன்றாம் இடத்துக்கு முன்னேறினார். பிரக்யானந்தா 8-வது இடத்தில் உள்ளார்.
உலக செஸ் தரவரிசைப் பட்டியலை ஃபிடே அமைப்பு இன்று வெளியிட்டது. கிளாசிக் போட்டிகளுக்கான இந்தத் தரவரிசைப் பட்டியலில் நடப்பு உலக செஸ் சாம்பியனான குகேஷ் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இவருடன் தெலங்கானாவைச் சேர்ந்த அர்ஜுன் எரிகைசி 5-வது இடத்தில் உள்ளார். மற்றொரு தமிழக செஸ் வீரரான பிரக்யானந்தா மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து 8-வது இடம்பிடித்துள்ளார்.
உலக செஸ் தரவரிசையில் முதல் 10 இடங்களில் 3 இந்தியர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தியா செஸ் விளையாட்டில் மீண்டும் தனது பலத்தை நிரூபித்துள்ளது.
The March #FIDERating lists are out!
— International Chess Federation (@FIDE_chess) March 1, 2025
Highlights
Magnus Carlsen continues his reign at the top.
World Champion Gukesh D gained 10 points, climbing to world #3 for the first time.
Praggnanandhaa R gained 17 points returning to the top 10.
Hou Yifan continues her… pic.twitter.com/cTDzlk7sAT
சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனைத் தோற்கடித்து குகேஷ் வெற்றிபெற்றார்.
இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் உலக தரவரிசையில் 10 புள்ளிகள் அதிகம்பெற்று 2787 புள்ளிகளுடன் தனக்கு முன்னிருந்த இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, அமெரிக்காவின் ஃபேபியானோ கரானாவை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக தரவரிசையில் மேக்னஸ் கார்ல்சன் 2833 புள்ளிகளுடன் வழக்கம்போல முதலிடத்தில் நீடித்து வருகிறார். இரண்டாமிடத்தில் 2802 புள்ளிகளுடன் ஹிகாரு நகாமுரா இடம்பெற்றுள்ளார்.
இதையும் படிக்க | செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் பார்க்க விரும்புகிறேன்: குகேஷ்
பெண்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் கோனேரு ஹம்பி 2538 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளார். தமிழக வீரரான வைஷாலி 2484 புள்ளிகளுடன் 14-வது இடத்திலும், ஹரிகா துரோணவள்ளி 2483 புள்ளிகளுடன் 16-வது இடத்திலும் உள்ளனர்.
இதில், சீனாவின் ஹோ யுஃபான் 2633 புள்ளிகளுடன் வழக்கம்போல முதலிடத்தில் உள்ளார்.