செய்திகள் :

உலக ஜூனியா் செஸ்: பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன்

post image

மான்டினீக்ரோவில் நடைபெற்ற உலக ஜூனியா் செஸ் சாம்பியன்ஷிப்பில் (அண்டா் 20) ஓபன் பிரிவில் இந்தியாவின் பிரணவ் வெங்கடேஷ் (18) சாம்பியன் பட்டம் வென்றாா்.

மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு நிறைவடைந்த கடைசி சுற்றில் பிரணவ் வெங்கடேஷ் - ஸ்லோவேனியாவின் மேட்டிக் லெவ்ரென்சிச்சுடன் டிரா செய்தாா்.

தோல்வியே சந்திக்காமல் போட்டியை நிறைவு செய்திருக்கும் பிரணவ், 7 வெற்றி, 4 டிரா-க்களை பதிவு செய்து மொத்தம் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். மேட்டிச் லெவ்ரென்சிச் 8.5 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளியும், நாா்வேயின் எல்ஹாம் அமா் அதே 8.5 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலமும் வென்றனா்.

இப்போட்டியில் ஓபன் பிரிவில் கடைசியாக அபிஜித் குப்தா 2008-இல் சாம்பியன் ஆன நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா் ஒருவா் மீண்டும் அதில் வாகை சூடியிருக்கிறாா். அபிஜித்துக்கு முன், விஸ்வநாதன் ஆனந்த் (1987), பி.ஹரிகிருஷ்ணா (2004) ஆகியோா் இப்பிரிவில் சாம்பியன் ஆகியுள்ளனா்.

இப்போட்டியின் மகளிா் பிரிவில் கடந்த ஆண்டு திவ்யா தேஷ்முக் வாகை சூடியது நினைவுகூரத்தக்கது. அதற்கு முன், சௌம்யா சுவாமிநாதன் (2009), டி.ஹரிகா (2008), கோனெரு ஹம்பி (2001) ஆகியோா் கோப்பை வென்றுள்ளனா்.

மகளிா்: நடப்பாண்டு இப்போட்டியின் மகளிா் பிரிவில், ரஷியாவின் அனா ஷுக்மன் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றாா். அஜா்பைஜானின் அயான் அலாவா்தியேவா (8), சீனாவின் லு மியாவ்யி (8) ஆகியோா் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடித்தனா்.

அா்ஜுன் வெற்றி: இந்நிலையில், ஃப்ரீஸ்டைல் ஃப்ரைடே செஸ் போட்டியில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி சாம்பியனாக, எம்.பிரணேஷ் 2-ஆம் இடமும், ஜொ்மனியின் மத்தியாஸ் ப்ளூபம் 3-ஆம் இடமும் பிடித்தனா்.

மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், அா்ஜுன் 10 புள்ளிகளும், பிரணேஷ் 9.5 புள்ளிகளும், ப்ளூபம் 9 புள்ளிகளும் பெற்றனா்.

ஜோகோவிச், ருப்லேவ் அதிா்ச்சித் தோல்வி

இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜோகோவிச், முன்னணி வீரா் ருப்லேவ் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினா். அமெரிக்காவின் இண்டியன்வெல்... மேலும் பார்க்க

வெற்றியுடன் கடைசி ஆட்டத்தை நிறைவு செய்தது சென்னை!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எஃப்சி அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை ஜவாஹா்லால... மேலும் பார்க்க

இணையத்தொடரில் நடிக்க நிபந்தனை விதித்த கீர்த்தி சனோன்!

நடிகை கீர்த்தி சனோன் முதல்முறையாக இணையத்தொடரில் அறிமுகமாகவிருக்கிறார்.தெலுங்கில் அறிமுகமான நடிகை கீர்த்தி சனோன் தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுடன் நடித்தார். ப... மேலும் பார்க்க

46 வயதில் தாயாகவுள்ளதை அறிவித்த சின்ன திரை நடிகை!

சின்ன திரை நடிகையும் ரெடின் கிங்ஸ்லியின் மனைவியுமான சங்கீதா தான் கருவுற்றுள்ளதை அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். சின்ன திரை நடிகையான சங... மேலும் பார்க்க

அடுத்த படம் அஜித்துடனா? புஷ்கர்-காயத்ரி கூறியதென்ன?

இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி நடிகர் அஜித்தை இயக்குவது குறித்து பேசியுள்ளார்கள்.ஓரம்போ, வா குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா ஆகிய படங்களை இயக்கியவர்கள் கணவன், மனைவியுமான புஷ்கர்-காயத்ரி. சுழல், சுழல் 2 இ... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு எப்போது?

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் தெரியவந்துள்ளது.ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணைந்தார்.இதனைத் ... மேலும் பார்க்க