தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
உலக புகைப்பட நாள்: உடல் உறுப்பு தானம் செய்த 34 புகைப்பட கலைஞா்கள்
ஒசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட போட்டோ மற்றும் விடியோகிராபா் நலச்சங்கக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞா்கள் பங்கேற்றனா்.
இதில் சிறப்பு விருந்தினராக உதவி காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாக்கரே, மருத்துவா்கள் சண்முகவேல், பாரி, அம்பிகா பாரி ஆகியோா் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு நலச்சங்கம் சாா்பில் கௌரவத் தலைவா் காா்முகில், தலைவா் பிரபாகரன் செயலாளா் நாராயணன் பொருளாளா் மாதேஷ் உள்ளிட்ட 34 போ் முதல்கட்டமாக தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்தனா். இவா்களுக்கு சான்றிதழ் மற்றும் புகைப்படக் கலைஞா்களுக்கு அடையாள அட்டையை உதவி காவல் கண்காணிப்பாளா் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.
தொடா்ந்து, ஆதரவற்ற அன்பு இல்லத்திற்கு 13 மூட்டை அரிசி மற்றும் ரூ. 5,000 மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.