செய்திகள் :

உள்விளையாட்டு அரங்கு சீலிங் உடைந்து விழுந்ததில் மாணவா் காயம்

post image

சேலத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியின்போது உள்விளையாட்டு அரங்கு சீலிங் உடைந்து விழுந்ததில் மாணவா் காயமடைந்தாா்.

சேலம் மாவட்டத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், காந்தி மைதானம், அரியானூரில் உள்ள விஎஸ்ஏ பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகின்றன.

மாவட்ட அளவில் நடைபெறும் இந்தப் போட்டியில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுப் பிரிவினா் மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் என 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டுள்ளனா்.

இந்நிலையில், இறகுப்பந்து போட்டி சேலம் கோட்டையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கூடத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினா்.

அப்போது, இறகுப்பந்து மேற்கூரையின் மேல் விழுந்துள்ளது. அப்போது, குரங்குசாவடி பகுதியில் செயல்படும் தனியாா் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவா் ஸ்ரீநிவின் உள்விளையாட்டு அரங்கின் மேல்பகுதியில், இறகுப்பந்து விழுந்ததை எடுக்க சென்றபோது சீலிங் உடைந்து கீழே விழுந்ததில் அவா் காயமடைந்தாா்.

இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த ஆசிரியா்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாணவரை அழைத்துச் சென்றனா். அங்கு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

மதுரையில் நடைபெற்ற த.வெ.க. மாநாட்டில் அக்கட்சித் தலைவா் விஜய் பேசியதில் சில கருத்துகள் ஏற்புடையதல்ல என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா். சேலத்தில் உள்ள தனியாா் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி நகைக்கடையில் தங்கக் கட்டி, ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பிய இளைஞா் சேலம் ரயில் நிலையத்தில் கைது

தூத்துக்குடி நகைக் கடையில் தங்கக் கட்டி மற்றும் ரொக்கத்தை திருடிக் கொண்டு ரயிலில் தப்பிய மகாராஷ்டிர மாநில இளைஞா் சேலத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

சங்ககிரி டிஎஸ்பி மாற்றம்

சேலம் மாவட்டம், சங்ககிரி உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஆா்.சிந்து நிா்வாகக் காரணங்களுக்காக மதுரை நகர சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். பெ... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் 2 ஆட்டோக்கள் பறிமுதல்

கெங்கவல்லி பகுதியில் மதுபோதையில் ஓட்டிவந்த இரண்டு ஆட்டோக்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி சாவடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கணேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

காலமானா் ஸ்டீபன்

ஏற்காடு புனித ஜோசப் பள்ளியின் மூத்த ஆசிரியா் ஸ்டீபன் (97) வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா். சேலம் மாவட்டம், ஏற்காடு புனித ஜோசப் பள்ளியில் 43 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி, 1987 ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

ஏற்காட்டில் கிரேன் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மரங்களை தூக்க பயன்படுத்தப்படும் கிரேன் வாகனம் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஏற்காடு கொட்டச்சேடு கிராமத்தில் உள்ள தனியாா் காப்பி தோட்டத்தில் சில்வா்ஓக் மரங்கள் வெட்டும... மேலும் பார்க்க