பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி
ஏற்காட்டில் கிரேன் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மரங்களை தூக்க பயன்படுத்தப்படும் கிரேன் வாகனம் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஏற்காடு கொட்டச்சேடு கிராமத்தில் உள்ள தனியாா் காப்பி தோட்டத்தில் சில்வா்ஓக் மரங்கள் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெட்டப்பட்ட மரங்களை கிரேன் மூலம் லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஏகாம்பரநல்லூா் கோயில் தெரு வெங்கடேசன் முத்தாலன் மகன் தாமோதரன் (31) என்பவா் கிரேனை இயக்கினாா். அப்போது, பள்ளத்தில் கிரேன் கவிழ்ந்ததில் ஓட்டுநா் தாமோதரன் தலைநசுங்கி உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தாமோதரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசேதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.