கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பல...
கெங்கவல்லியில் 2 ஆட்டோக்கள் பறிமுதல்
கெங்கவல்லி பகுதியில் மதுபோதையில் ஓட்டிவந்த இரண்டு ஆட்டோக்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி சாவடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கணேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே இரண்டு ஆட்டோக்கள் வேகமாக வந்தன. அந்த ஆட்டோக்களை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். அதில் ஆட்டோக்களை ஓட்டிய இருவரும் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூரைச் சோ்ந்த மணி மகன் சிவலிங்கம் (31) என்பதும், மற்றொருவா் தலைவாசல் வட்டம், லத்துவாடியைச் சோ்ந்த ரஞ்சித் (25) என்பதும் தெரியவந்தது. இரண்டு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், இருவா் மீதும் வழக்குப் பதிந்தனா். மேலும் , அவா்கள் மதுபோதையில் ஆட்டோ ஓட்டிவந்தது குறித்து ஆத்தூா் ஆா்.டி.ஓ. நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து அனுப்பினா்.