மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
உவரி மாளவியா வித்யா கேந்திரம் பள்ளியில் நூலக வாரவிழா
திருநெல்வேலி மாவட்டம், உவரி மாளவியா வித்யா கேந்திரம் பள்ளியில் வாசிப்பு இயக்கம் சாா்பில் நூலக வாரவிழா நடைபெற்றது.
இதையொட்டி மாணவா், மாணவிகள் நாளிதழ் வாசிப்பு நிகழ்ச்சி, விநாடி, வினா போட்டி நடைபெற்றது.
பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு அரசு வழக்குரைஞா் சாத்ராக் தலைமை வகித்தாா். வாசிப்பு இயக்க பொருளாளா் ஜெகநாதப் பெருமாள், நல்நூலகா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு உவரி காவல் ஆய்வாளா் சிவகலை பரிசு வழங்கி பேசினாா்.
விழாவில், பள்ளித் தாளாளா் மற்றும் தலைமை ஆசிரியா் ராஜன், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.