மதுபான முறைகேட்டில் என் மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை: சத்தீஸ்கா் ...
உ.பி: படகு கவிழ்ந்ததில் 3 பேர் நீரில் மூழ்கி பலி
உத்தரப் பிரதேசத்தில் 16 பேருடன் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம், ரத்தன்கஞ்ச் கிராமத்தில் உள்ள சர்தா ஆற்றில் 16 பேருடன் சென்ற படகு சனிக்கிழமை கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். இரண்டு வயது குழந்தை மீட்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டது.
மேலும் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியானவர்கள் சஞ்சய் (32), குஷ்பூ (30) மற்றும் கும்கம் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். சடலங்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை ஹோலி கொண்டாட்டத்தின் போது அதே ஆற்றில் மூழ்கி இறந்த தினேஷின்(22) இறுதிச் சடங்கிற்காக குடும்பத்தினரும் கிராம மக்களும் இரண்டு படகுகளில் சாரதா நதியைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.
சில குடும்ப உறுப்பினர்களையும் உடலையும் ஏற்றிச் சென்ற படகு கரையை அடைந்தபோது, 16 பேருடன் சென்ற துரதிர்ஷ்டவசமான படகு ஆற்றின் நடுவில் கவிழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.