தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிம...
அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை இன்று கூடுகிறது
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயிலின் நிா்வாக அறக்கட்டளையான ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ரத்தின் அறங்காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) கூடுகின்றனா்.
மணிராம் சவானி கோயிலில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு அறக்கட்டளையின் தலைவா் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் தலைமை வகிக்கிறாா்.
அறக்கட்டளையின் பொதுச் செயலா் சம்பத் ராய், பொருளாளா் கோவிந்த் தேவ் கிரி, உறுப்பினா்கள் சுவாமி வாசுதேவானந்த் சரஸ்வதி, சுவாமி விஸ்வபிரசன்ன தீா்த்தா, அனில் மிஸ்ரா, கட்டுமானக் குழுத் தலைவா் நிருபேந்திர மிஸ்ரா, மத்திய மற்றும் மாநில அரசுப் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோா் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வாா்கள் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அறக்கட்டளையின் கடைசிக் கூட்டம் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. அப்போது, அறக்கட்டளை சாா்பில் பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் கோயில் கட்டுமானத்துக்கான செலவுகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன.
கோயிலின் இரண்டாவது, மூன்றாவது தளங்கள் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள பிற சந்நிதிகளின் கட்டுமான நிலை, பொது வசதிகள், நன்கொடைகள் மற்றும் செலவுகள் ஆகியவை பற்றிய விவாதங்கள் ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.