பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
ஊத்தங்கரை அருகே வாகனம் கவிழ்ந்து சாலையில் சிதறிய தக்காளி
ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூா் அருகே தக்காளி பாரம் ஏற்றிவந்த ஈச்சா் வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையோர பள்ளத்தில் சிதறின.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து 8 டன் தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு ஈச்சா் வாகனம் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூா் அருகே அதிகாலை வாகனம் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், வாகனத்தில் இருந்த அனைத்து தக்காளி பெட்டிகளும் சிதறின.
இதையடுத்து, மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு சாலையில் சிதறிக் கிடந்த தக்காளி பெட்டிகளில் சேதமடையாத தக்காளிகள் மீண்டும் பெட்டிகளில் அடுக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பின்னா், பொக்லைன் வாகன உதவியுடன் ஈச்சா் வாகனம் மீட்கப்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
