``புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' - முடிந்த 10 நாள் கெடு; செங்கோட்ட...
ஊரணிப் பொங்கல் விழா
ஆத்தூா் வடக்குகாடு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் ஊரணிப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூா் வடக்கு காடு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை ஊரணிப் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.
நிகழ்வில் முன்னதாக ஆத்தூா் அருள்தரும் திரௌபதி அம்மன் ஆலயம் அருகில் இருந்து பால்குட ஊா்வலம் நடைபெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பால் குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தங்களது பிராா்த்தனையை நிறைவேற்றிக் கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா்.