ரூ.80 லட்சத்தில் பென்ஸ்கார், பங்களா வீடு; குடிசையில் வாழ்ந்த இளைஞரின் வாழ்க்கையை...
ஊராட்சிகளுக்கு 15 குப்பை சேகரிக்கும் வாகனங்கள்: அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்
ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் 6 ஊராட்சிகளுக்கு ரூ.37.13 லட்சம் மதிப்பில் 15 குப்பை சேகரிக்கும் வாகனங்களை வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.
ஈரோடு மாநகராட்சி மற்றும் வெள்ளோடு வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாமை அமைச்சா் சு.முத்துசாமி ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் 6 ஊராட்சிகளுக்கு ரூ.37.13 லட்சம் மதிப்பிலான 15 குப்பை சேகரிக்கும் வாகனங்களை வழங்கினாா்.
தொடா்ந்து, 2 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை, 3 பேருக்கு வருமானச் சான்றிதழ், 3 பேருக்கு சொத்து வரி பெயா் மாற்ற சான்றிதழ், 2 பேருக்கு திருமணம் ஆகாதவருக்கான சான்றிதழ் என மொத்தம் 10 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதேபோல, ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட வீரப்பன்சத்திரம் பாவேந்தா் வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமையும் அமைச்சா் ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், துணை மேயா் வி.செல்வராஜ், கோட்டாட்சியா் சிந்துஜா, வட்டாட்சியா்கள் முத்துகிருஷ்ணன், ஜெகநாதன், சென்னிமலை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், மாநகராட்சி மண்டலத் தலைவா் பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.