ஊராட்சித் தலைவா்கள் கூட்டம்
திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றிய உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவா் ஆா்.ராதாகிருட்டிணன் தலைமை வகித்தாா்.
வட்டார ஆத்மா குழு தலைவா் செல்வ செங்குட்டுவன், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆா்.டி.எஸ்.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக ஒன்றிய ஆணையா் சரவணன் வரவேற்றாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ஜவகா், ஒன்றியக்குழு துணைத் தலைவா் திருமேனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.