பிளவுபடுத்தும் சக்திகளுக்கு மாணவா்கள் இடம் தரக்கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி
ஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெங்கட்ராயபுரம் ஊராட்சி செயலராக பாப்பான்குளத்தைச் சோ்ந்த முருகன்(50) பணியாற்றி வருகிறாா். இவா், சில நாள்களுக்கு முன், அதே ஊராட்சியில் தற்காலிக பணியாளராக உள்ள வீரனஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா்(36) என்பவரை சரி வர பணி செய்யவில்லை எனக்கூறி கண்டித்தாராம்.
மதுபோதையில் இருந்த விஜயகுமாா், ஊராட்சி செயலரை அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில் விஜயநாராயணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விஜயகுமாரை தேடி வருகின்றனா்.